உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட4 பேர் கைது

Published On 2023-10-24 11:53 IST   |   Update On 2023-10-24 11:53:00 IST
புதுக்கோட்டையில்அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட4 பேர் கைது

புதுக்கோட்டை,  

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதனூர் கோவில்பட்டி மனக்காடு அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்துவதாக திருமயம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜுக்கு தகவல் வந்து ள்ளது.

சம்பவ இடத்திற்கு போலீ சார் சென்றனர். அப்போது அங்கு ஆதனூர் புதுகுடியி ருப்பு பகுதியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் ரமேஷ், திருப்பத்தூர் செவ் வூரை சேர்ந்த முருகேசன் மகன் செல்வம்(வயது 21), தேவ கோட்டையை சேர்ந்த காளி முத்து மகன் கணேஷ் (37), முருகேசன் மகன் மணி(27), ஆதனூரை சேர்ந்த ஆண்டி மகன் நாகராஜன்(42) என்பது தெரியவந்தது.

இதில் ரமேஷ் தவிர மற்றவர் 4 பேரை போலீசார் கைது செய்யது அவர்களிட மிருந்து 13 இருச்சக்கர வாகனங்கள், 7 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News