உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. நகரசபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-09-05 06:40 GMT   |   Update On 2023-09-05 06:40 GMT
  • பா.ஜ.க. நகரசபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில், நகரசபை துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் முன்னிலை யில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் தி.மு.க. நகரசபை உறுப்பி னர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-

ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் பா.ஜ.க.வை சேர்ந்த குமார். இவர் தொடர்ந்து நகரசபை கூட்டத்திலும், பொது வெளியிலும் சகோதரத்து வத்தையும், சமூக நல்லிணக் கத்தையும் சீர்குலைத்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார்.

எனவே பா.ஜ.க. வார்டு கவுன்சிலர் குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான கவுன்சிலர் ஜவா என்ற முகம்மது ஜஹாகீர் தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News