- ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
- நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கேணிக் கரை கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் (கி) தேனி சை.அக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ் மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரசெண்ட் (பிறை) ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உரிமையாளர் பயாஸ் அகமது வரவேற்றார்.
பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹாராஜா, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம் ,மாணவர் சங்க செயலாளர் சந்தோசம்,கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி,உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.