உள்ளூர் செய்திகள்

பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம்

Published On 2023-10-06 07:58 GMT   |   Update On 2023-10-06 07:58 GMT
  • பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என அதிகாரி எச்சரித்துள்ளார்.
  • தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் திரியும் கால் நடைகளால் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

காய்கனி, உணவுப் பொருட்களை வாங்கி வாகனங்களில் வைத்து விட்டு அடுத்த கடைக்கு செல்வதற்குள் மாடுகள் அத்துமீறி வாகனத்தில் வைத்துள்ள பொட்ட லங்களை கடித்து சாலையில் வீசி மேய்ந்து விடுகிறது.மேலும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நீண்ட தூரம் செல்லும் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து மற்றும் சுற்றுலா வாக னங்களும் சாலையின் குறுக்கே செல்லும் கால்ந டைகளால் விபத்தில் சிக்குகிறது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மாட்டு உரிமை யாளர்கள் பொது சாலையில் போக்கு வரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக திரியும் தங்களது கால்நடை களை அக்டோபர் மாதம் 8-ந் தேதிக்குள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் 9-ந் தேதி முதல் சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து அடைக்கப்பட்டு, மீட்க வரும் கால்நடை உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும் 3 தினங்களுக்குள் மீட்கப்படாத கால்நடை களை பொது ஏலம் விடப்படும் என தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News