கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்ட தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். மாவட்ட இணை செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் பூமிநாதன், மாவட்ட செயலாளர் முனியசாமி, சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவர் சுரேஷ்குமார், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, கருவூல கணக்குத்துறை மாவட்ட செயலாளர் ஜெனிஸ்ட்டர், சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலுசாமி, பொதுப்பணித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட அமைப்பாளர் அப்துல் நஜ்முதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.