- கமுதி அருகே மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- ஒவ்வோர் காளைக்கும் தலா 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெறிஞ்சிபட்டி கிராமத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றறாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்றற வடமாடு மஞ்சு விரட்டு போட்டிக்கு ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், துணைத் தலைவர் துரைப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகளும், 100-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஒவ்வோர் காளைக்கும் தலா 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. இதில் பிடிபடாத காளை களின் உரிமையாளர்க ளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்க ளுக்கும் ரொக்க பணம், நினைவு பரிசு வழங்கப்பட்டது.கமுதி மத்திய ஒன்றியச் செயலர் எஸ்.கே.சண்முகநாதன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ் செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.