உள்ளூர் செய்திகள்

முதுகுளத்தூரில் மினி மாரத்தான் போட்டி

Published On 2023-04-08 13:55 IST   |   Update On 2023-04-08 13:55:00 IST
  • முதுகுளத்தூரில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
  • போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் பி.கே மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 6 கி.மீ தூரத்துக்கு மினி மாரத்தான ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் 21 வயதிற்குட்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதுகுளத்தூர்- கடலாடி நெடுஞ்சாலையில் நடந்தது. போட்டியை மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசும், 2-வது இடம் பிடித்தவருக்கு 5,100 ரொக்கப்பரிசும், 3-வது இடம் பிடித்தவருக்கு ரூ.3100 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

10 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் முதல் பரிசாக ரூ.2,100-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-ம், 3- பரிசாக ரூ.1,100-ம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் பூவலிங்கம் என்ற மாரி, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News