உள்ளூர் செய்திகள்

ராமலிங்க பிரதிஷ்டை விழா

Published On 2023-05-25 08:43 GMT   |   Update On 2023-05-25 08:43 GMT
  • ராமலிங்க பிரதிஷ்டை விழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
  • நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழா 3 நாட்கள் நடைபெறும்.

27-ந் தேதி திட்டக்குடி சாலை சந்திப்பு அருகில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் ராமனுக்கு முக்தி அளித்த நிகழ்ச்சி நடைபெறும். 28-ந் தேதி தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலில் விபிச னருக்கு முடி சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

29-ந் தேதி ராமநாதசுவாமி கோவிலில் ராமர் புறப்பாடாகி வீதி உலா வந்து ராமநாதசாமி கோவிலில் ஆஞ்சநேயர் வேடமணிந்து ஆக்ரோ சத்துடன் ராமநாதன் சன்னதியை சுற்றி வலம் வந்து ராமநாதசுவாமியை வணங்கி காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

பின்னர் மூலவர் சன்னதி யில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடைபெறும். இரவு 8 மணிக்கு ராமர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags:    

Similar News