உள்ளூர் செய்திகள்

ஓட்டல்களில் உணவு தரம் குறித்து தொடர் சோதனைகள் நடத்தப்படும்

Published On 2023-10-06 13:33 IST   |   Update On 2023-10-06 13:33:00 IST
  • ஓட்டல்களில் உணவு தரம் குறித்து தொடர் சோதனைகள் நடத்தப்படும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள திருப்புல்லாணியில் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவிற்கான மேளா நடைபெற்றது.

சென்னை உணவு பாதுகாப்பு நிர்வாகத்துறை கமிஷனர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின் படி திருப்புல்லாணியில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவிற்கான மேலா நடந்தது.

உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கீழக்கரை மற்றும் திருப்புல் லாணி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.

அதன் பின்னர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வின் போது கெட்டுப் போன தோசை மாவு, மூன்று கிலோ பிளாஸ்டிக், 2 கிலோ கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.சுத்தம் இல்லாத ஓட்டல் களை கண்டறிந்து நோட் டீஸ் வழங்கப்பட்டு ரூ.4000 அபதாரம் விதிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.விஜயகுமார் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தி தவறுகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதித்து வருகிறோம்.

இவ்வாறு தொடர்ந்து சோதனைகள் செய்வதால் மட்டும் தவறுகள் முற்றிலும் தடுக்கப்படாது.பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முறையான அனுமதியின்றி,கா லாவதியான உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் குறித்து உணவுப் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

அரசுத் துறையுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தவறுகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கு ஏதுவான வழிமுறைகளை கண்டறிய இயலும் என்றார்.

Tags:    

Similar News