உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து புகார் மனு கொடுத்த பொதுமக்கள்.

இரு மடங்கு பணம் தருவதாக ரூ.3 கோடி மோசடி

Published On 2023-04-27 08:37 GMT   |   Update On 2023-04-27 08:37 GMT
  • இரு மடங்கு பணம் தருவதாக ரூ.3 கோடி மோசடி தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
  • தொடர்ந்து அவர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டினம் பகுதி பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பெரியபட்டினத்தை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் சாகுல்ஹமீது என்பவர் நிலங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் எங்களிடம் குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் 2 மடங்கு லாபம் தருவதாக கூறினார். இதை நம்பி நாங்கள் பணம் செலுத்தினோம்.

ஆனால் அவர் பணம் தராமல் ஏமாற்றி விட்டார். சாகுல்ஹமீது பொதுமக்க ளிடம் ரூ.3கோடி வரை மோசடி செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கு உள்ளது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடர்ந்து அவர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News