- மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
- கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புல்லக்கடம்பன் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வருவாய்த்துறையின் மூலம் 41 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூ தியம், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், இயற்கை மரண உதவித்தொகை என ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல் உட்பிரிவு, பட்டா மாறுதல் முழுப்புலம் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.53 ஆயிரத்து170 மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக் கலைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பழமரத் தொகுப்பு ரூ.22 ஆயிரத்து 700 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தார்பாய், தெளிப்பான் ரூ.9 ஆயிரத்து 640 மதிப்பீட்டி லும், தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 2 பயனாளிகளுக்கு பயணியர் ஆட்டோ, துணிக்கடை ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 326 மதிப்பீட்டிலும் என மொத்தம் 146 பயனாளி களுக்கு ரூ.18 லட்சத்து 62 ஆயிரத்து 836 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கி னார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக் களுக்கு அரசின் நலத் திட்டங்கள் இன்று வழங்கப் படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்துத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.
இப்பகுதியை பொருத்த வரை விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாயம் பணிகளுக்கு தேவையான திட்டங்கள் வேளாண்மைத் துறையின் மூலம் செயல் படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட் சியர் கோபு, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முகம்மது முக்தார், திருவாடனை வட்டாட்சியர் கார்த்திகேயன் , புல்லக் கடம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் மாதவி கண்ணன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.