- 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (வயது 30). இவர் நண்பர்களுடன் காரில் நேற்று வாணியம்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் (24). இவர் கூரியர் வேனை ஓட்டிக்கொண்டு வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அருகே வந்து கொண்டு இருந்தார்.
அப்போது முன்னாள் உமேஸ்வரன் ஓட்டி சென்ற கார் மீது சஞ்சய் ஓட்டி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் கார் சாலை தடுப்பில் மோதி நின்றது. வேன் கவிழ்ந்தது.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சாலையில் இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தில் காரும், கூரியர் வேனும் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.