பால்குட ஊர்வலம் சென்ற பெண்கள்.
கீழ்படவேட்டம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
- ஆடி 3-ம் வெள்ளியையொட்டி நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கச்சால நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கீழ்படவேட்டம்மன் ஆலயத்தில் ஆடி 3-ம் வெள்ளி முன்னிட்டு பால் கூட ஊர்வலம் இன்று நடைபெற்றது.
கீழ்படவேட்டம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ படவேட்டமனுக்கு பக்தர்கள் காப்பு கட்டி இன்று பாலாற்றங்கரையிலிருந்து கரகம் ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வன்னிவேடு மோட்டூர், தொப்பை செட்டி தெரு, வாலாஜா எம்பிடி ரோடு வழியாக கச்சால நாயக்கர் தெரு வந்து கீழ்பட வேட்டம்மன் ஆலயத்திற்கு வந்து அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.
பின்னர் மாலை 4 மணியளவில் வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெறும். நிகழ்ச்சியினை நாட்டாமைத்தாளர்கள், ஜூரிகள், பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.