உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பரிசு வழங்கிய போது எடுத்த படம்
மாவட்ட அளவிலான செஸ் விழிப்புணர்வு போட்டி
- வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பை ஆகியவற்றை வழங்கினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.