உள்ளூர் செய்திகள்

தீ விபத்து தடுப்பு குறித்து ஒத்திகை

Published On 2023-05-14 07:47 GMT   |   Update On 2023-05-14 07:47 GMT
  • எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்ப ட்டுவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் திரவநிலை எரிவாயு நிறுவனத்தின் சார்பில் தீ விபத்து தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மாந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்ப ட்டுவர்களுக்கு முதலுதவி அளிப்பது, மருத்துவமனைக்கு அனுப்புவது, குறித்தும் இயற்கை எரிவாயு நிறுவன பாதுகாப்பு துறையினர், மாவட்ட தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, எரிவாயு நிறுவன மண்டல தலைவர் வெங்கடேசன், முதுநிலை பாதுகாப்பு பொறியாளர் தாமோதரன், அலுவலர்கள் பாலாஜி, இசக்கி ராஜாராம்,சுரேஷ்,ரவிதேஜா,தீயணைப்பு நிலை அலுவலர் பாலாஜி, மாந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் ரமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News