உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை ஆயுதபடை வளாகத்தில் பல்பொருள் அங்காடி திறந்து வைத்த காட்சி.

ராணிப்பேட்டை ஆயுதபடை வளாகத்தில் பல்பொருள் அங்காடி

Published On 2022-09-17 14:56 IST   |   Update On 2022-09-17 14:56:00 IST
  • டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்
  • போலீசார் பலர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் பல் பொருள் அங்காடியை காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி தீபாசத்யன் முன்னிலையில் நேற்று இரவு காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இதனையடுத்து எஸ்.பி. தீபா சத்யன் பல்பொருள் அங்காடியை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி விற்பனையை தொடங்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் விஸ்வேஸ்வரய்யா (மாவட்ட தலைமையகம்) முத்துக்கருப்பன் (சைபர் கிரைம்) டிஎஸ்பிக்கள் பிரபு (ராணிப்பேட்டை), பிரபு (அரக்கோணம்), இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார், சதீஷ்குமார், தனஞ்செழியன், சீனிவாசன், விஜயலட்சுமி, சரவணன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட இந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பல்பொருள் அங்காடியில் காவலர்கள் தீயணைப்பு துறை சிறைத்துறை ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோர் பல் பொருட்களை வாங்கி பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News