- ஊழியர்கள் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு ரேஷன் கடையை பூட்டி சென்றனர்.
- ரேஷன் கடை உட்புறத்தில் இருந்து அடர்ந்த கரும்புவை வெளியாகிக் கொண்டிருந்தது.
சேலம்:
இளம்பிள்ளை அருகே நடுவனேரி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்காடு பகுதியில் ரேஷன் கடை செயல்படுகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வீட்டுப் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை ஊழியர்கள் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு ரேஷன் கடையை பூட்டி சென்றனர்.
அதிகாலை 4 மணி அளவில் ரேஷன் கடை உட்புறத்தில் இருந்து அடர்ந்த கரும்புவை வெளியாகிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் உள்லே தீ பிடித்து எரிந்தது. இதனைக் கவனித்த பகுதி மக்கள் ஒன்று கூடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்ட காலி சாக்குகள் தீயில் எரிந்து சேதமானது. நேற்று மதியம் லாரி மூலம் ரேஷன் கடையில் அரிசி மற்றும் சர்க்கரை கோதுமையை இறக்கினர். அப்போது மூட்டையை இறக்கி யாரோ பீடி குடித்துவிட்டு அதனை அணைக்காமல் போட்டுச் சென்றதால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாமென தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.