உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி ராமநத்தம் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
- நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது.
- இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது. இதனால் ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டது. மேலும் வாகையூரில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். லேசான மழை பெய்தால் இந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர். இதனையடுத்து அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் நாள் கணக்கில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து மின்சார துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.