உள்ளூர் செய்திகள்
கருமத்தம்பட்டியில் செயல்படாத சிக்னல்களால் விபத்து ஏற்படும் அபாயம்
- நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது
- போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி, சோமனூர் நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து சிறு சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.
எனவே கிருஷ்ணாபுரம், கொங்கு வேளாளர் திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி கருமத்தம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.
ஆனால் அவை கடந்த பல மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.இதனால் அந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.