கும்பாபிஷேக விழாவையொட்டி இட்டமொழி முத்தாரம்மன் கோவிலில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சாமி தரிசனம்
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
- ராகுல்காந்தி பிரதமராக வேண்டி அவரது பெயரில் அர்ச்சனை நடைபெற்றது.
நெல்லை:
இட்டமொழி முத்தா ரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
ராகுல்காந்தி பெயரில் அர்ச்சனை
முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப் பட்டது. தொடர்ந்து வருகிற 2024-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வேண்டி அவரது பெயரில் அர்ச்சனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கோவில் அன்னதானத்தில் கலந்து கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்ல பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் நம்பிதுரை, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், மூலைக்கரைப்பட்டி நகர தலைவர் முத்து கிருஷ்ணன், நெல்லை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்துராஜா, முன்னாள் வட்டார தலைவர் ஞான் ராஜ், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சித்திரை வேல், வெள்ளைச்சாமி, வடிவேல், சிதம்பரம், தாமோதரன், ராஜன், லிங்க பாண்டி, சுந்தரபாண்டி, கோபால், வெள்ளைதுரை, சுயம்பு, வெற்றிவேல், கணேசன், சுடலை, சந்திரசேகர், முனியாண்டி, சின்னதுரை, இட்டமொழி காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள், கோவில் கமிட்டி நிர்வாகி கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.