உள்ளூர் செய்திகள்
தீக்குளிக்க முயன்றவரை படத்தில் காணலாம்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில்என்ஜினீயர் தீக்குளிக்க முயற்சி
- சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சதீஷ்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சதீஷ்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீ சாரிடம் கூறுகையில், மெக்கானிக்கல் என்ஜினீ யரிங் படித்துள்ள நான் சேலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறியதால் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் ஓராண்டு ஆகியும் எந்த வட்டியும் வரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனால் நான் மன உளைச்சலில் உள்ளேன். எனவே அந்த பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.