சங்ககிரி டி.எஸ்.பி. அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி ஆய்வு
- சங்ககிரி டி.எஸ்.பி. அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்
- நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும். மேலும், சட்ட ஒழுங்கு பிரச்சனை நடக்காமல் இருக்க ரோந்து பணியை அதிகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
சங்ககிரி:
சங்ககிரி டி.எஸ்.பி. அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். சங்ககிரி கோட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்தார். அப்போது அவர், நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும். மேலும், சட்ட ஒழுங்கு பிரச்சனை நடக்காமல் இருக்க ரோந்து பணியை அதிகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
அதிக விபத்துகள் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு மேலும் விபத்து நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின்போது, டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர்கள் தேவி(சங்ககிரி), சந்திரலேகா (எடப்பாடி), குமரவேல்பாண்டியன்(கொங்கணாபுரம்), வெங்கடேஷ்பிரபு (மகுடஞ்சாவடி), வளர்மதி(மகளிர் போலீஸ்), ஹேமலதா (போக்குவரத்து போலீஸ்), மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.