உள்ளூர் செய்திகள்
போலீசாருக்கு மனஉளைச்சலை போக்க யோகா, நடைபயிற்சி
- காவலர்களுக்கு பணியின் போது ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் வகையில் காலை புத்து ணர்வு பயிற்சி
சேலம்
சேலம் மாநகரத்தில் உள்ள போலீஸ் நிலையங்க
ளில் பணிபுரியும் உதவிகமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், காவலர்களுக்கு பணியின் போது ஏற்படும் மன உளைச்சலை குறைக்கும் வகையில் காலை புத்து ணர்வு பயிற்சி ஜாகீர் அம்மாபாளையம் தாசில்தார் அலுவலகம் மைதானத்தில் இன்று காலை நடை பெற்றது. இதில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அனைவரும் கலந்து கொண்டு யோகா, நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டனர்.
இதேபோல் அனைத்து மாநகர போலீஸ் நிலை யங்களிலும் நடைபெற்றது.