உள்ளூர் செய்திகள்

ஆய்வு கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் ஆபிரகாம் பேசினார்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Published On 2022-12-18 09:59 GMT   |   Update On 2022-12-18 09:59 GMT
  • தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவேட்டை கொண்டு இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.
  • 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடா்பாக அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், சமூக சீா்திருத்தத் துறை அரசுச் செயலருமான ஆபிரகாம் தலைமை தாங்கி பேசியதாவது :-

வட்டம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் இறப்பு பதிவேட்டைக் கொண்டு வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.

மேலும், நவம்பா் 9 ஆம் தேதி முதல் டிசம்பா் 8 ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது டிசம்பா் 26 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோ்தல் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் அனைத்தையும் நிலுவையில் இல்லாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த தோ்தல் படிவங்களை இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு அனைத்து அலுவலா்கள் நிலையிலும் ஆய்வு செய்து, தூய வாக்காளா் பட்டியல் என்ற இலக்கை அடைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதற்கு 34,302 படிவங்கள், நீக்கம் செய்ய 23,807 படிவங்கள், திருத்தம் செய்ய 17,988 படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் 52,394 படிவங்களும், 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

இச்சிறப்பு கருக்க முறைத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்று ஜனவரி 5 ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா, மாநக ராட்சி ஆணையா்கள் சரவண குமாா் (தஞ்சாவூா்), செந்தில் முருகன் (கும்பகோணம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News