உள்ளூர் செய்திகள்

சீல் வைக்கப்பட்ட கடையை படத்தில் காணலாம்.

பண்பொழியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு 'சீல்'

Published On 2022-09-22 07:50 GMT   |   Update On 2022-09-22 07:50 GMT
  • பண்பொழி பகுதியில் முருகன் என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்தது.
  • உணவு பாதுகாப்பு துறை மூலம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழி பகுதியில் முருகன் என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கைப்பற்றி உணவு பாதுகாப்பு துறை மூலம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புகையிலை விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ப்பட்டு அவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News