உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி.

சின்ன சேலம் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீடு தீப்பிடித்து எரிந்தது: ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2023-09-03 12:54 IST   |   Update On 2023-09-03 12:54:00 IST
  • இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
  • இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வெங்கடா சலம் (வயது 60). ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியரான இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இவர்க ளுக்கு சொந்தமான விவ சாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வெங்கடாசலமும், சுமதியும் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது இவரது கூரை வீடு திடீரென புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை கண்ட வெங்கடாசலமும், சுமதியும் அலறி அடித்துக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மல மலவென கொழுந்து விட்டு எறிந்தது.

இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை முழுவது மாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணம், பீரோ, கட்டில், டி.வி., பிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்ப லானது. திடீரென கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News