உள்ளூர் செய்திகள்

கோவையில் தந்தையை அரிவாள் மனையால் வெட்டிய மகன் கைது

Published On 2023-04-08 15:01 IST   |   Update On 2023-04-08 15:01:00 IST
  • தந்தை மகன் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு இருவரும் குடிபோதையில் இருந்தனர்.
  • கோவில்பாளையம் போலீசார் குருநாதனை கைது செய்தனர்.

கோவை,

கோவை கீரணத்தம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கர்ணன் (வயது50). இவர் தனியார் நிறுவனத்தில் தோட்டப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் குருநாதன் (25). இவருக்கு திருமணமாகி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று தந்தை மகன் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு இருவரும் குடிபோதையில் இருந்தனர். இந்நிலையில் கர்ணன் தனது மகனிடம், மனைவியுடன் சேர்ந்து வாழும்படியும், வேலைக்கு செல்லும்படியும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த கர்ணன் அவரது மகனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குருநாதன், அவரது தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் இருந்த அரிவாள் மனையை எடுத்து தலை, முகம் மற்றும் பல இடங்களில் வெட்டினார். இதனையடுத்து அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் காயம் அடைந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று குருநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News