உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்- மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல்
- பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
- மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.02.2025 அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.