உள்ளூர் செய்திகள்

தென்காசி அரசு மருத்துவமனையில் சிறப்பு சுகாதார முகாம்

Published On 2023-10-02 14:17 IST   |   Update On 2023-10-02 14:17:00 IST
  • கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.
  • அரசு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற இணை இயக்குனர் பிரேமலதா கேட்டுக் கொண்டார்.

தென்காசி:

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயுஷ்மான் பவா முகாம் நடைபெற்றது. பிரதம மந்திரி ஆரோக்கியா திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்பு சுகாதார முகாம் நடத்தப்பட்டது. தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார். பழனி நாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்.

இணை இயக்குனர் பிரேமலதா அரசு திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும்பிரதம மந்திரி காப்பீட்டு திட்ட அட்டைபெற்றுவருடத்திற்கு 5 லட்சம் மதிப்புள்ள சிகிச்சைகளைஇலவசமாக பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.அனைத்து பொதுமக்களும் மிகுந்த காப்பீட்டு திட்ட அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். உறைவிட மருத்துவர் செல்வபாலன் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தேசிய சுகாதாரா திட்ட அலுவலர் கார்த்திக் அறிவுடைநம்பி, தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புனர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டதில் தமிழக அளவில் 3-வது இடம் பிடித்த தென்காசி மருத்துவமனைக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார். மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் கார்த்திக் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.

Tags:    

Similar News