பட்டுக்கோட்டையில் நாளை, ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரிய பதிவு சிறப்பு முகாம்
- முகாமானது காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
- இதில் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர் நலவாரியத்தில் பதிவு செய்யலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாம கேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுனர்களின் நலவாரிய பதிவை அதிகரிக்க நலவாரிய பதிவு சிறப்பு முகாம்கள் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக நாளை (சனிக்கிழமை) பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத் தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இதர வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆதார் எண் இணைக்கப்பட்ட கைபேசி, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அசல் ஆவணங்களுடன் டிரைவர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர் நலவாரியத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது