உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-08-30 14:10 IST   |   Update On 2023-08-30 14:10:00 IST
  • நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.
  • சங்கரன்கோவில்-நெல்லை இடையே குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:-

சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரை வரை புதிய பஸ்கள் மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்கு இடைநில்லா ஒன்-டு-ஒன் பஸ் மற்றும் சங்கரன்கோவில் - நெல்லை குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News