உள்ளூர் செய்திகள்
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
- பிரியா குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது.
- கிணறு குதித்து தற்கொலை செய்த் கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீஸ் சரகம் சாஸ்திரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் பிரியா (வயது17). பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்த பிரியா குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்து காணப்பட்ட பிரியா அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்த் கொண்டார்.
இது குறித்து பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.