திண்டுக்கல்லில் ஷேர் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்
- குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகள் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
- போக்குவரத்து துறை அதிகாரிகள் இது போன்ற விதி மீறல் பயணங்களை கண்டறிந்து அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்தின் புறநகர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் திண்டுக்கல்லு க்கு வந்து செல்கின்றனர். இதே போல் திண்டுக்கல்லில் இருந்து தினந்தோறும் பல்வேறு கிராமங்களுக்கு மில் வேலைகளுக்கு தொழி லாளர்கள் செல்கின்றனர்.
இது போன்ற பயணங்க ளின் போது போதிய அரசு பஸ்கள் இல்லாததால் மினி பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ க்களிலேயே அவர்கள் செல்கின்றனர். குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகள் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்க ளும் இது போன்ற ஷேர் ஆட்டோக்களில் பயணித்து வருகின்றனர். எந்த இடத்தில் வேண்டுமானா லும் ஏறிக் கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் இறங்கி கொள்ளலாம் என்ற சிறப்பு வசதி உள்ள நிலையில் இங்கு நிர்ணயிக்க ப்படும் கட்டணங்களை ஏற்று பயணிகள் செல்கி ன்றனர்.
ஆனால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செல்வதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இது போன்ற விதி மீறல் பயணங்களை கண்டறிந்து அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.