உள்ளூர் செய்திகள்

நெல்லையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணி : நெல்லையில் எழுத்து தேர்வை 61 சதவீதம் பேர் எழுதினர்

Published On 2022-11-06 15:00 IST   |   Update On 2022-11-06 15:00:00 IST
  • அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நெல்லையில் 14 மையங்களில் இன்று நடைபெற்றது.
  • 2 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வை எழுத 3,831 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

நெல்லை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அள வையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

நெல்லையில் பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, டவுன் கல்லணை மேல் நிலைப்பள்ளி, சாப்டர் பள்ளி உள்பட 14 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

காலை, மதியம் என 2 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வை எழுத 3,831 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

காலையில் தொடங்கிய தேர்வை 2,332 பேர் எழுதினர். இது 60.87 சதவீதம் ஆகும். 1,499 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

தேர்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்கள் தேர்வினை கண்காணித்தனர்.

Tags:    

Similar News