உள்ளூர் செய்திகள்

கோவை ஒண்டிப்புதூர் மாநகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில் திடீர் தீ விபத்து

Published On 2023-07-01 14:54 IST   |   Update On 2023-07-01 14:54:00 IST
  • சிங்காநல்லூர் 57-வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூரில் குப்பைகளை தரம் பிரிக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கு உள்ளது.
  • தீயணைப்பு துறையினர் தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

பீளமேடு,

கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் 57-வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூரில் குப்பைகளை தரம் பிரிக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கு உள்ளது.

இந்த உரக்கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உரக்கிடங்கில் இருந்து புகை வெளியேறியது.இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு தீ மலமலவென பரவியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தின் காரணமாக உரக்கிடங்கில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன், கோவை மாநகராட்சி உதவி நிர்வாக பொறியாளர் ராமசாமி, சுகாதார அலுவலர் ஜீவன்முருகதாஸ் ஆகியோரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தகவல் அறிந்த முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான நா.கார்த்திக் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

Tags:    

Similar News