உள்ளூர் செய்திகள்
அகரம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
- அகரம் பேரூராட்சியில் ரூ.70 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- பணிகளை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தாடிக்கொம்பு:
அகரம் பேரூராட்சியில் கடந்த 17-ந்தேதி கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி ரூ.70 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
அடுத்த மாதம் அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி வளர்ச்சி திட்ட பணிகள்முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பணிகளை அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத் தலைவர் ஜெயபால், அகரம் பேரூராட்சி செயல் அலுவலர்ஈஸ்வரி, மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.