உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 88 வழக்குகள் பதிவு

Published On 2023-11-13 15:15 IST   |   Update On 2023-11-13 15:15:00 IST
  • மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

நெல்லை:

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகள்படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதி முறைகள் ஆகியவற்றை பின்பற்றி நெல்லை, தென்காசி மாவட்ட காவல்துறையினர் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடிக்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி நெல்லை புறநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 27 வழக்குகளும், மாநகரப்பகுதியில் 20 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 200 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன்.

Tags:    

Similar News