உள்ளூர் செய்திகள்
பவானி கூடுதுறையில் பரிகார மண்டபத்துக்குள் புகுந்த தண்ணீர்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- பவானி கூடுதுறையில் புனித நீராட தடை

Published On 2022-10-16 10:51 GMT   |   Update On 2022-10-16 10:51 GMT
  • பவானி கூடுதுறை காவரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சென்று வருகிறது.
  • கூடுதுறை படிதுறை படிக்கட்டுகளை மூழ்கியபடி கரை வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்வதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடுதுறைக்கு புனித நீராடி திதி, தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள். இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் கூடுதுறைக்கு வந்து புனித நீராடி சங்க மேஸ்வரரரை வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு தண்ணீர் வருகிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டியது

இதையொட்டி மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அம்மாபேட்டை, பவானி உளபட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வௌளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதே போல் பவானி கூடுதுறை காவரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சென்று வருகிறது. மேலும் கூடுதுறை படிதுறை படிக்கட்டுகளை மூழ்கியபடி கரை வரை தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

மேலும் பரிகாரம் செய்யும் மண்டபத்திலும் தண்ணீர் புகுந்து சூழ்ந்தது.

இதையொட்டி பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரப்படி கோவில் அதிகாரிகள் சார்பில் பவானி கூடுதுறையில் புனித நீராட, திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதுறை காவிரி ஆற்றுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்லாத படி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்தனர். புனித நீராட தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில் அடைப்பட்டு இருந்ததால் ஒரு சிலர் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தங்கள் முன்னோருக்கு பரிகாரம் செய்தனர். அவர்கள் புனித நீராட முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

அதே நேரத்தில் பக்தர்கள் வழக்கம் போல சங்க மேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News