உள்ளூர் செய்திகள்
பணநாயகம் வென்றுவிட்டது- அதிமுக வேட்பாளர் தென்னரசு பேட்டி
- முதல் 5 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13,515 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,620, தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 290 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் 5 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13,515 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,620, தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 290 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்றுவிட்டது என தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கூறியுள்ளார்.