வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
- தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது.
- காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது பருவமழையை உருவாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை தொடரும் என்றும், கடலோர பகுதிகளில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, இன்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான உருவாகியுள்ளது. தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவானது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழை இந்த மாதத்துடன் நிறைவடையும் சூழலில் இந்தியாவில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.