தமிழ்நாடு கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் விருது- அமைச்சர் வழங்கினார்
- 16 வகையான கைத்திறன் தொழில்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
- 30 வயதிற்கு உட்பட்ட 150 இளம் கலைஞர்களுக்கும் விருதுகள், ரொக்க பரிசுகள், சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான பூம்புகார் கைவினைஞர்கள் விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் 16 வகையான கைத்திறன் தொழில்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
"குழு உற்பத்தி விருது" 3 குழுவினருக்கும், "பயன்பாடு சார்ந்த கைவினைப் பொருட்கள் விருது" 3 கைவினை கலைஞர்களுக்கும், "பூம்புகார் மாவட்ட கலைத்திறன் விருது" 36 பெண்கள் உட்பட 85 பேருக்கும், அடுத்த தலைமுறைக் கைவினைஞர்கள் கலைத்திறன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற, 30 வயதிற்கு உட்பட்ட 150 இளம் கலைஞர்களுக்கும் விருதுகள், ரொக்க பரிசுகள், சான்றிதழ், பதக்கங்களை அமைச்சர் அப்பரசன் வழங்கினார்
விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் ஷோபனா, அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.