உள்ளூர் செய்திகள்

மத்திய, மாநில அரசுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்து கைதான அக்காள், தங்கை 2 பேர் ஜாமீனில் விடுவிப்பு

Published On 2022-09-18 10:19 GMT   |   Update On 2022-09-18 10:19 GMT
  • கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த குணா மனைவி நந்தினி, அதே முகவரியை சேர்ந்த ஆனந்தன் மகள் நிரஞ்சனா ஆகியோர் என்பது தெரியவந்தது.
  • இருவரும் சகோதரிகள். மதுவுக்கு எதிராக நந்தினி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு:

ஈரோடு பஸ் நிலைய பகுதியில் 2 இளம்பெண்கள் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை அச்சிட்ட நோட்டீஸ்களை விநியோகம் செய்து கொண்டு இருந்தனர்.

இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார், விரைந்து வந்து நோட்டீஸ் விநியோகம் செய்து வந்த 2 இளம்பெண்களை பிடித்து, அவர்களிடம் இருந்த நோட்டீசை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில், மத்திய, மாநில அரசுகளுக்கும், பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து, அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்றனர்.

பின்னர், அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால், இருவரையும் மகளிர் போலீஸ் மூலம் குண்டு கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் மதுரை மாவட்டம் கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த குணா மனைவி நந்தினி (29), அதே முகவரியை சேர்ந்த ஆனந்தன் மகள் நிரஞ்சனா (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரும் சகோதரிகள். மதுவுக்கு எதிராக நந்தினி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டவுன் போலீசார் 151 பிரிவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்தினி மற்றும் நிரஞ்சனாவை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இதனால் ஈரோடு பஸ் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News