உள்ளூர் செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் டெண்டர் முறைகேடு- சி.எம்.டி.ஏ. என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
- முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ. 86.87 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளை டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2019 - ம் ஆண்டு மார்க்கெட்டில் உள்ள கடைகளை டெண்டர் விட்டபோது உணவகம் அமைப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த இடத்தை செந்தில்குமார் என்பவருக்கு பதிவு செய்து கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சி.எம்.டி.ஏ என்ஜினீயர் சீனிவாசராவ் உள்பட இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ. 86.87 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.