தாமிரபரணி ஆற்றில் கெண்டை மீன்குஞ்சுகளை விடும் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி. அருகில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ் மற்றும் பலர் உள்ளனர்.
தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் விடும் திட்டம்: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 2 லட்சம் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டார்.
- மீன் வளர்ப்பதற்கான பணி ஆணைகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
செங்துங்கநல்லூர்:
உலக மீன் வளர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் மற்றும் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இன்று நடைபெற்றது.
இதில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 2 லட்சம் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டார். தொடர்ந்து மீன் வளர்ப்பதற்கான பணி ஆணைகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.