உள்ளூர் செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவி பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல- வைகோ

Published On 2023-05-11 10:03 GMT   |   Update On 2023-05-11 10:44 GMT
  • கவர்னரின் எந்த வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
  • தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லாவிதமான யோசனையும் செய்து ஏற்படுத்தி உள்ளார்.

திருச்சி:

திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் 80 சதவீதம் முடிந்து விட்டது. ம.தி.மு.க. ஊக்கம் வடிவம் கொண்டு வளர்ந்து வருகிறது. அதற்கான அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ம.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை இல்லாத துர்பாக்கியம், சாபக்கேடு தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி. இல்லாத அதிகாரத்தை தானே எடுத்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியை எதிர்த்து செயல்படுகிறார். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக நம் தமிழகம் உள்ளது. எல்லோரும் பாராட்டும் நேரத்தில் கவர்னர் உளறிக்கொண்டு இருக்கிறார்.

கவர்னரின் எந்த வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துத்துவ ஏஜெண்டாக செயல்பட்டால் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம்.

கவர்னர் கவர்னராக நடந்து கொள்ளவில்லை. அவர் ஒரு கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். இது போன்ற நிலை இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த தான்தோன்றிப் போக்கு சரியல்ல. கவர்னர் அவரது பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல.

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லாவிதமான யோசனையும் செய்து ஏற்படுத்தி உள்ளார். எது நல்லதோ அதை அவர் செய்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற நந்தினியை போல எல்லா மாணவிகளும் உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News