உள்ளூர் செய்திகள்
குகை மாரியம்மன் கோவிலில் தீ மிதித்த இளம்பெண் காயம்-மருத்துவமனையில் அனுமதி
- சேலம் குகை மாரியம்மன்- காளியம்மன் கோவிலில் நேற்று மாலை தீ மிதி திருவிழா நடைபெற்றது.
- மோனிஷா (வயது 19) தீ மிதிக்கும் போது காலில் தீக்காயம் ஏற்பட்டது.
கொண்டலாம்பட்டி:
ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் குகை மாரியம்மன்- காளியம்மன் கோவிலில் நேற்று மாலை தீ மிதி திருவிழா நடைபெற்றது. அப்போது கிச்சிப்பாளையத்தை அடுத்த எருமபாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகள் மோனிஷா (வயது 19) தீ மிதிக்கும் போது காலில் தீக்காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மோனிஷா சிகிச்சை பெற்று வருகிறார்.