உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

தேசிய கல்வி கொள்கையை அரசியலாக்க வேண்டாம்- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

Published On 2022-09-12 11:13 GMT   |   Update On 2022-09-12 11:47 GMT
  • அகில இந்திய தேர்வுகளை எதிர் கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம்.
  • மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள்.

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழசை சௌந்தராஜன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தேசிய கல்வி கொள்கையில் குறைபாடுகள் இருந்தால் அதை அரசிடம் சுட்டிக் காட்டலாம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்வது சரியானதாக இருக்காது.

தேசிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம் என்றே நான் சொல்கிறேன். அனைவருக்கும் ஒன்றுபட்ட சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதை முழுவதும் படித்து விட்டு எதனால் மறுக்கிறீர்கள் என்று கருத்து சொல்ல வேண்டும். மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து குழு அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது பள்ளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News