வரதராஜ பெருமாள் கோவிலில் 4 ஆண்டுகளாக காத்து கிடக்கும் கொடிமரம்
- பல லட்சம் செலவில் சுமார் 30 அடி நீளத்தில் பர்மா தேக்கிலான கொடி மரத்தை வாங்கி உபயோகமாக அளித்துள்ளார்.
- மரம் கோவிலின் உள் பிரகாரத்தில் மழையிலும், வெயிலிலும் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதார ண்யேஸ்ரர் ்கோவிலுடன் இணைந்த தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் வேத நாராயணன் அபீஷ்ட வரதராஜ பெருமாள்என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் தோப்புத் துறையில் உள்ள திருமாலை வழிபட்டதாகவும் கோவிலின் முகப்பில் அவர் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்ததாகவும் கூறப்படுகிறது. ்இக்கோவிலில் கடந்த 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்பொழுது கொடி மரத்தை புதிதாக புதுப்பிக்க பக்தர் ஒருவர் பல லட்ச ரூபாய் செலவில் சுமார் 30 அடி நீளத்தில் பர்மா தேக்கிலான கொடி மரத்தை வாங்கி உபயோகமாக அளித்துள்ளார்
4 ஆண்டுகளாக மரம் கோவிலின் உள் பிரகாரத்தில்மழை வெயில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. அறநிலைய துறையின் அனுமதி பெற்று அமைக்க வேண்டும் என்ற காரணத்தால் 4 ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது. கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்
உபயதாரர்கள் செய்ய முன்வந்தும் அறநிலைய த்துறையின் அலட்சியப் போக்கால் பல லட்ச ரூபாய் மரம்தற்போது வீணாகும் நிலையில் உள்ளது முன்பு இங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய கொடி மரமும் மழையில் முறிந்து விழுந்து விட்டது.
இதனால் ஆண்டு பெருவிழாவிற்கு தற்போது புதிதாக சிறிய அளவில் ஆர்எஸ்பதி மரத்தில் கொடிமரம் நட்டு அதில் கொடியேற்றம் நடைபெற்று உள்ளது எனவே உடனடியாக கொடிமரம் அமைக்க அறநிலைய துறை அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.