உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசிய காட்சி.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முக்கிய முடிவு - உடனடியாக செயல்படுத்த மேயர் உத்தரவு

Published On 2023-06-28 14:29 IST   |   Update On 2023-06-28 14:29:00 IST
  • தூத்துக்குடி மாநகராட்சியில் முக்கிய பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
  • கூட்டத்தில், மாநகர பகுதிகளில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியில் முக்கிய பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதான சாலைகளில் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் முழு அளவில் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிடா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி யில் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல் அடுக்கு வாகன நிறுத்துமிடப் பகுதிகளில் வாகன போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்துவது, மாநகர பகுதிகளில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

முக்கிய முடிவுகள்

இதில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதனை உடனடியாக செயல்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.

கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News