உள்ளூர் செய்திகள்
பெரும்பாறை-புல்லாவெளி இடையே சாலையோர முட்செடிகள் வெட்டும் பணி
- மலைச்சாலை இருபுறங்களிலும் முட்செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் அடிக்கடி விபத்து நடந்த வண்ணம் உள்ளது.
- முட்செடிகளை இயந்திரம் மூலம் வெட்டி அப்புறப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தடிய–ன்குடிசை வரை சாலை இருபுறங்களிலும் முட்செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக பஸ், லாரி, கார், ஜீப் மற்றும் கனரகவாகனங்கள் செல்லும் போது பைக் உள்ளிட்ட வாகனங்கள் விலகிசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் புல்லாவெளி-பெரும்பாறை இடையே அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து புல்லாவெளி முதல் தடியங்குடிசை வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளின் இருபுற ங்களிலும்இருந்த முட்செடிகளை இயந்திரம் மூலம் வெட்டி அப்புறப்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.